ETV Bharat / international

ஏமன் உள்நாட்டுப் போர்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகள்! - Yemen Martin Griffith

சானா: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகளால் இரண்டு பெரிய வெடிவிபத்துகள் அரசு கட்டுப்பாட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Yemen
ஏமன்
author img

By

Published : Feb 10, 2021, 3:40 PM IST

மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், அதிபர் மன்சூர் ஹாதிக்கும், ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் தொகை மிகுந்த நகரமான மரிப்பில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகளால் இரண்டு பெரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில், யாருக்கும் உயர் சேதம் ஏற்படவில்லை. அரசு கட்டுப்பாட்டுப் பகுதியில் விழுந்த ஏவுகணையில், கிட்டத்தட்ட 30 ஏமன் படை வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். தற்போது, அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படுகிறது.

அண்மையில், ஏமனில் நடக்கும் போருக்கு அமெரிக்கா அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக ஜோ பைடன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சீன ஆய்வகத்திலிருந்து கரோனா பரவவில்லை- நிபுணர் குழு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.