டெல் அவிவ் : ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் பலூன்கள் மூலம் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் தரப்பில் ட்விட்டரில், “இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட பலூன்களுக்கு பதிலளிக்கும் விதமாக, நாங்கள் ஹமாஸ் இராணுவத் தளத்தைத் தாக்கினோம். காசாவிலிருந்து ஏவப்படும் எந்தவொரு பயங்கரவாத முயற்சிக்கும் நாங்கள் தொடர்ந்து பதிலளிப்போம் ” எனத் தெரிவித்திருந்தனர்.
முன்னதாக காசா பகுதியிலிருந்து தெற்கு இஸ்ரேல் மீது பலூன்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) தாக்குதல் நடத்தப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பாக ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஹசீம் காசிம், “இஸ்ரேல் தனது இயலாமை காட்டவும், தனது சிதைந்த ராணுவத்தை கட்டமைக்கவும் முயற்சித்துள்ளது” என்று கேலி செய்தார்.
இதையும் படிங்க : உலகின் மிகச்சிறிய தொழில்நுட்பம் - இஸ்ரேல் புதிய சாதனை