ETV Bharat / international

ட்ரம்பின் தலைக்கு இவ்வளவு கோடியா? - விலை நிர்ணயம் செய்த ஈரான்!

தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலையைக் கொண்டுவருபவருக்கு 80 மில்லியன் டாலராக ஈரான் பரிசுத்தொகை நிர்ணயம் செய்துள்ளது.

DT
DT
author img

By

Published : Jan 6, 2020, 5:19 PM IST

Updated : Jan 6, 2020, 7:20 PM IST

ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியைக் கொலைசெய்ய உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலைக்கு 80 மில்லியன் டாலர் விலை நிர்ணயம் செய்து ஈரான் அறிவித்துள்ளது. சுலைமானியின் இறுதி ஊர்வலத்தை ஒளிபரப்பிய ஈரான் அரசு ஊடகத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக ஈரானிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய ரூபாயின் மதிப்பில் 80 மில்லியன் டாலர் என்பது 576 கோடி.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஜன. 3ஆம் தேதி அமெரிக்க விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரான் நாட்டின் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி உயிரிழந்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் உத்தரவின்பேரில் நடைபெற்ற இந்த அதிரடி தாக்குதலில் ஈரான் தளபதி கொல்லப்பட்டது, மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

ஈரானின் தலைமைப் பொறுப்புடன் மிக நெருக்கமான நபராகத் திகழ்ந்த சுலைமானிக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. தனது நாட்டின் போர் நாயகனாகத் திகழ்ந்த தளபதியைக் கொன்ற அமெரிக்காவுக்கு சரியான பதிலடி தருவோம் எனவும் ஈரான் அரசு அறைகூவல் விடுத்தது.

இந்நிலையில், ஈரான் தளபதி மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட டொனால்ட் ட்ரம்பின் தலைக்கு ஈரான் அரசு தற்போது விலை நிர்ணயம் செய்துள்ளது. டொனால்ட் ட்ரம்பின் தலையைக் கொண்டுவருபவருக்கு ஈரானின் அறிவிப்பின்படி இந்தச் சன்மானம் அளிக்கப்படும்.

ஈரான் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தும் பட்சத்தில், அந்நாடு விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், ட்ரம்பின் தலைக்கே ஈரான் தற்போது விலை நிர்ணயம் செய்துள்ளது.

இதையும் படிங்க: போருக்கு அறைகூவல்: 2020ஐ அதிர்வுடன் ஆரம்பித்துவைத்த அமெரிக்கா

Intro:Body:Conclusion:
Last Updated : Jan 6, 2020, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.