ஐக்கிய அரசு அமீரக தலைநகர் அபுதாபியில் வாழும் இந்தியப் பெண்கள், 'இந்தியா மகளிர் சங்கம்' (Indian Ladies Association) என்ற தன்னார்வ அமைப்பு மூலம் பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டுவருகின்றது.
அந்த வகையில், அபுதாபியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அந்த அமைப்பு முழு வீச்சில் களமிறங்கியுள்ளன. கடற்கரைகளை சுத்தப்படுத்துவது, மரம் நடுவது போன்ற பணிகளை மேற்கொண்டுவரும் அந்த அமைப்பினர், சுற்றுச்சூழல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாதந்தோறும் பரப்புரை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக இந்திய மகளிர் சங்கம் அமைப்பின் தலைவர் சுனிதா வாக்லே கூறுகையில், "இதுவரை 500 கிலோ எடைகொண்ட தாள்களை சேகரித்துள்ளனர். இதில், அலுவலக தாள்கள், வார இதழ்கள், புத்தகங்கள், காகிதப் பைகள், பாடப் புத்தகங்கள், செய்தித் தாள்கள் என அனைத்துவிதமான தாள்களும் அடங்கும்.
அக்டோபர் மாத இறுதிக்குள், வன்னி, வேம்பு ஆகிய மரங்களைச் சுற்றுப்புறத்தில் நட்டு, அதனை பராமரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதில் கலந்துகொள்ள பொதுமக்களையும் ஊக்குவிப்போம்" என்றார்.
ஐக்கிய அரசு அமீரகத்தின் சமூக வளர்ச்சி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஐந்து இந்திய சமூக அமைப்புகளில் 'இந்திய மகளிர் சங்கம்' ஒன்று.
இதையும் படிங்க : 'பாசப் போராட்டத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த 6 யானைகள்'