உலகம் முழுவதும் கரோனா வைரஸ் காரணமாகப் பல்வேறு நாடுகளின் மக்கள் அரசின் அறிவிப்புகளைத் தீவிரமாகக் கடைப்பிடித்துவருகின்றனர். ஒவ்வொரு நாடும் மக்கள் அனைவரும் வீட்டில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளது. ஆனால், உரிமையாளர்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் சோர்வாகக் காணப்பட்டால் சிறிது தூரம் வாக்கிங் அழைத்துச் செல்ல அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், சைப்ரஸ் நாட்டில் லிமாசோல் மாகாணத்தைச் சேர்ந்த வாகிஸ் டெமெட்ரியோ (Vakis Demetriou), செல்லப் பிராணியை வாக்கிங் அழைத்துச் செல்வதில் புதிய முறையைக் கையாண்டுள்ளார். அதில், நாயை அவர் அழைத்துச் செல்லாமல் ட்ரோனை கட்டிவிட்டு அனுப்பியுள்ளார். மேலும், தனது வீட்டு பால்கனியிலிருந்து ட்ரோனை இயக்கி நாய்க்குட்டியைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டார்.
இந்தக் காணொலியை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த அவர், "வீட்டில் பாதுகாப்பாக இருங்கள், ஆனால் உங்கள் செல்லப் பிராணியின் மகிழ்ச்சியை மறந்துவிடாதீர்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். தற்போது, இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: சீனாவில் பெரிய அளவில் தம்பதிகளைப் பிரிக்கும் கரோனா!