ETV Bharat / international

அல்-கய்தாவுடன் தலிபான் தொடர்பில் உள்ளது - ஐநா அதிர்ச்சி ரிப்போர்ட்! - ஆப்கான்ஸிதான் உள்நாட்டுப் போர்

இஸ்லாமாபாத் : ஆப்கன் அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகும், அல்-கய்தா பயங்கரவாத அமைப்புடன் தலிபான் தொடர்பு வைத்திருப்பதாக ஐநா அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.

al qaida
al qaida
author img

By

Published : Jun 3, 2020, 5:57 PM IST

ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா-தலிபான் இடையே கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க ஆப்கன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில், அல்-கய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடனான தொடர்பு துண்டித்துக் கொள்வதாகவும், ஆப்கன் கிளர்ச்சியாளர்கள் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதைத் தடுப்போம் என்றும் தலிபான் வாக்களித்திருந்தது.

ஆனால், இதுகுறித்து தலிபான் நடவடிக்கை எடுத்ததாக எந்த ஒரு செய்தியும் வெளிவரவில்லை. இந்த விவகாரத்தில் தலிபான்கள் மௌனம் காப்பது அதனை பாதுகாப்பாக செயல்படுத்துவதற்காகவே என, ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸால்மே கலில்ஸாத் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அல்-கய்தா பயங்கரவாத அமைப்புடன் தலிபான் தொடர்பில் இருப்பதாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "அல்-கய்தாவைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டிருந்தாலும், கடந்த சில மாதங்களாக அந்த அமைப்பின் வேறுசில தலைவர்கள் இன்னும் ஆப்கானிஸ்தானில் தான் தங்கியுள்ளனர்.

அவர்கள் தலிபான் அமைப்போடு தொடர்புடைய ஹக்கானி அமைப்புடன் தொடர்பில் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் நடக்கும் வன்முறைகளுக்குப் பின் இவர்கள் செயல்பட்டு வருகின்றனர்" எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து தலிபான்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.

ஆனால், அமெரிக்க-தலிபான் அமைதி ஒப்பந்தத்துக்கு எதிரான விமர்சகர்கள், இந்த விஷயத்தில் தலிபானின் மௌனம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஏஷியா ஃபுரோகிராம் என்று ஆய்வு நிறுவனத்தின் தலைவர் மைக்கில் கெலேமான் கூறுகையில், "குறைபாடுகளுடைய இந்த ஒப்பந்தத்தில் பயங்காளிகளுடனான தொடர்பை துண்டிப்பது குறித்து தலிபானின் வாசகங்கள் தெளிவற்று காணப்படுகிறது.

அல்-கய்தா முக்கியத் தலைவர்களுடன் பேசுவதையாவது தலிபான்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என, அமெரிக்க வலியுறுத்த வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க : அதிபர் பொய் சொல்கிறார் என்று கூறுவது தவறு - ட்விட்டருக்கு எதிராகக் களமிறங்கும் ஃபேஸ்புக்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.