லிபியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு 34 ஆண்டுகளாக அதிபராக இருந்த கடாபி கொல்லப்பட்டதையடுத்து அரசியல் ரீதியாக பல்வேறு குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தொடர் வான்வழி தாக்குதலில் 121 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தலைநகர் திரிபோலியை கைப்பற்றும் நோக்கத்தில் கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய வான்வழி தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு 23 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.