ETV Bharat / international

”பாதுகாப்பானது என்று உறுதியாகும் வரை கரோனா தடுப்பு மருந்தை பரிந்துரைக்க மாட்டோம்” - டெட்ரோஸ் அதானோம் - பாதுகாப்பானது என்று உறுதியாகும் வரை கரோனா தடுப்புமருந்தை பரிந்துரைக்க மாட்டோம்

லண்டன் : கோவிட்-19 தொற்றுக்கு உருவாக்கப்படும் தடுப்புமருந்து பாதுகாப்பானது என்று உறுதியாகும் வரை அதை பொதுமக்களுக்கு பரிந்துரைக்க மாட்டோம் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

Won't recommend vaccines unless safe
Won't recommend vaccines unless safe
author img

By

Published : Sep 5, 2020, 12:08 PM IST

உலகெங்கும் கோவிட்-19 தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டெ செல்கிறது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் கரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

கரோனாவுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர். இந்தச் சூழலில், மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் நிறைவடைவதற்கு முன்னரே, கடந்த மாதம் ஸ்புட்னிக் V என்ற கரோனா தடுப்பு மருந்தை பொதுமக்கள் மீது பயன்படுத்த ரஷ்யா அனுமதி வழங்கியது.

இதேபோல சீனாவும், மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் முடிவதற்குள், குறைந்தது இரண்டு வகையான தடுப்புமருந்தைப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்கு முன்னரே, கரோனா தடுப்பு மருந்து அமெரிக்கர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இவை மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும், இந்தத் தடுப்புமருந்தின் பாதுகாப்புதன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். இது குறித்து சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், முறையான மருத்துவப் பரிசோதனைகள் நிறைவடையாமல் ஒப்புதல் அளிக்கப்படும் தடுப்புமருந்தை எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று சுமார் 75 விழுக்காடு அமெரிக்கர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், "பயனற்ற, பாதுக்காப்பில்லாத ஒரு தடுப்புமருந்தை உலக சுகாதார அமைப்பு என்றும் அங்கீகரிக்காது என்பதை நாங்கள் பொது மக்களுக்கு உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தடுப்புமருந்துக்கு எதிரானவர்கள் என்ன கதையை வேண்டுமானாலும் கூறுவார்கள், ஆனால் தடுப்புமருந்துகள் முந்தை காலங்களில் செய்துள்ள சாதனைகளே அவற்றின் முக்கியத்துவத்தை புரிய வைக்கும். எனவே, இதுபோன்ற செய்திகளால் மக்கள் குழப்பமடையக்கூடாது.

ஐந்து வயதிற்கும் குறைவானவர்கள் எத்தனை பேர் கரோனா தடுப்புமருந்தால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பதை அவர்களே (தடுப்பு மருந்திற்கு எதிரான பரப்புரை மேற்கொள்பவர்கள்) பார்த்துக் கொள்ளலாம்" என்றார்.

ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து பிரிட்டனும் மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்கு முன்னரே கரோனா தடுப்பு மருந்தை மக்களின்மீது பயன்படுத்த ஒப்புதல் வழங்கும் வகையில் சட்டத்தை மாற்றியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகெங்கும் தற்போதுவரை கரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டு கோடியே 67 லட்சத்து 95 ஆயிரத்து 802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் எட்டு லட்சத்து 78 ஆயிரத்து 963 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: ”கரோனா தடுப்பு மருந்து கண்டறிவதில் உலக சுகாதார அமைப்புடன் இணைய மாட்டோம்" - அமெரிக்கா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.