உலக சுகாதார அமைப்பு கரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச தலைவர்கள், முன்னணி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அப்போது, உலகநாடுகளின் ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை மேற்கொண்டு கரோனாவை எதிர்கொள்வது எப்படி எனத் தெரிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில், பிரான்ஸ் அதிபர், ஜெர்மனி அதிபர், ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் ஆகியோர் பங்கேற்று, வைரஸ் எதிர்கொள்ளும் நடவடிக்கையில் தங்களின் உறுதிப்பாட்டை தெரிவித்தனர். சர்வதேச தலைவர்களின் ஒத்துழைப்புக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் நன்றி தெரிவித்துள்ளார்.
அனைத்து நாடுகளின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் கைகோர்க்கும்பட்சத்தில் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுவருவது உறுதி என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனத்தை அமெரிக்கா முன்வைத்துள்ளது.
சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாக விமர்சித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியையும் நிறுத்துவதாக உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் 253 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா!