ETV Bharat / international

அறிகுறி அற்றவர்கள் மூலம் பரவுமா கரோனா? - குழப்பும் உலக சுகாதார அமைப்பு - கோவிட்-19 பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: அறிகுறி அற்றவர்கள் மூலம் கரோனா பரவும் வாய்ப்புகள் குறைவு என்று உலக சுகாதார அமைப்பு கூறியிருந்த நிலையில், அது சில ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டது, இறுதியான முடிவல்ல என்று அந்த அமைப்பு திடீர் விளகத்தை அளித்துள்ளது.

Maria Van Kerkhove
Maria Van Kerkhove
author img

By

Published : Jun 10, 2020, 12:51 PM IST

உலகிலுள்ள 190க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த உலக சுகதார அமைப்பு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற விமர்சனமும் உலக நாடுகளிடையே அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை காணொலி வழியே செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதரா அமைப்பின் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ், "கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த தகவல்களை பல்வேறு நாடுகள் விரிவாக சேகரித்துவருகின்றன.

அறிகுறி அற்ற(Asymptomatic) நோயாளிகளையும் அவர்களது தொடர்புகளையும் கண்காணித்தனர். அதில் அறிகுறி அற்றவர்கள் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவுவது என்பது மிக மிக அரிதாகவே இருந்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

உலக சுகாதரா அமைப்பின் இந்த கருத்துக்கு உலகளவிலுள்ள பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் தங்கள் அதிருப்திகளை வெளிப்படுத்திவருகின்றனர். அறிகுறி அற்றவர்கள் மூலம் கோவிட்-19 பரவாது என்பதற்கு இதுவரை எவ்வித அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை என்று ஃபிரான்ஸ் நாட்டின் பிட்டி-சல்பெட்ரியர் மருத்துவமனை கல்லூரி பேராசிரியர் கில்பர்ட் டெரே தெரிவித்துள்ளார்.

எதிர் கருத்துக்கள் வலுவடைந்ததை தொடர்ந்து மரியா வான் கெர்கோவ் ட்விட்டர் பக்கத்தில் தனது பேச்சின் விளக்கத்தை பதிவிட்டுள்ளார். அதில், "அறிகுறி அற்றவர்கள் மூலம் இந்த தொற்று பரவுவது குறித்த ஆய்வை நடத்துவது கடினம்.

இருப்பினும் நமக்கு தற்போதுள்ள தரவுகளை வைத்து பார்க்கும்போது அறிகுறிகள் தென்படுபவர்களைவிட அறிகுறி அற்றவர்கள் மூலம் கரோனா பரவுவது என்பது குறைவாகவே உள்ளது" என்று பதிவிட்டு, இது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றையும் இணைத்துள்ளார்.

  • 2/2 ... on transmission from asymptomatic individuals are difficult to conduct, but the available evidence from contact tracing reported by Member States suggests that asymptomatically-infected individuals are much less likely to transmit the virus than those who develop symptoms

    — Maria Van Kerkhove (@mvankerkhove) June 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல வைரஸ் பரவல் குறித்து செவ்வாய்கிழமை நடைபெற்ற விவாதம் ஒன்றில் பங்கேற்ற அவர், "நான் ஒரு சில ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே அதை கூறினேன். அது உலக சுகாதார அமைப்பின் கொள்கை. அறிகுறி அற்றவர்கள் மூலம் கரோனா பரவாது என்று நான் கூறவில்லை.

நான் அரிதானது என்ற சொல்லை பயன்படுத்தியதுதான் உலக நாடுகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். தற்போதுள்ள ஆய்வுகளின் அடிப்படையிலேயே நான் அந்த சொல்லைப் பயன்படுத்தினேன்" என்று தெரிவித்தார்

இதையும் படிங்க: உச்சத்தை தொடும் கோவிட்-19 பாதிப்புகள் : கதி கலங்கி நிற்கும் பாகிஸ்தான் அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.