கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 34 ஆயிரம் பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை கரோனாவால் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்புடன் இந்தியா கைகோர்த்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெட்ரோஸ் அதனோம் (Tedros Adhanom) தனது ட்விட்டர் பக்கத்தில், ''கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பின் போலியோ கண்காணிப்புக் குழுவுடன் இந்திய சுகாதார அமைச்சகம் கைகோர்த்துள்ளது. இதனால் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பை வேகமாக குறைக்க முடியும்.
போலியோவை எதிர்த்து எப்படி இந்தியா எழுந்ததோ, அதேபோல் விரைவில் கரோனாவை எதிர்த்து இந்தியா மீண்டு வரும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
-
My thanks to Minister @drharshvardhan for his leadership and collaboration with @WHO. Through these joint efforts we can defeat the #coronavirus and save lives. Together! #COVID19 https://t.co/G7ttUz5QkH
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) April 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My thanks to Minister @drharshvardhan for his leadership and collaboration with @WHO. Through these joint efforts we can defeat the #coronavirus and save lives. Together! #COVID19 https://t.co/G7ttUz5QkH
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) April 15, 2020My thanks to Minister @drharshvardhan for his leadership and collaboration with @WHO. Through these joint efforts we can defeat the #coronavirus and save lives. Together! #COVID19 https://t.co/G7ttUz5QkH
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) April 15, 2020
தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ''உலக சுகாதார அமைப்பின் போலியோ கண்காணிப்புக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதால் கரோனாவை எதிர்த்து வேகமாக மீண்டு வரமுடியும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உலக சுகாதார அமைப்பிற்கு நிதி நிறுத்தம் தவறு: ட்ரம்ப் முடிவுக்கு ஐநா தலைவர் கண்டனம்