ஐரோப்பிய நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இதுவரை 10 லட்சத்திற்கும் மேல் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது.
ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஜெர்மனியில் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு 1.43 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதையடுத்து ஜெர்மனியில் தொடர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இதன் எதிரொலியாக ஜெர்மனியில் உள்ள வெர்நெக் பகுதியில் 403 ஆண்டுகளாக இயங்கிவரும் மதுபானத் தொழிற்சாலை முதன்முறையாக மூடப்படுகிறது. வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை, பொதுவெளியில் மக்கள் அதிகம் கூடுவதைத் தடுக்கும் விதத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெர்நெக் மதுபான நிறுவனத்தின் மேலாளர் கிரிஸ்டைன் லாங் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: நியூயார்க்கில் திரும்பும் நம்பிக்கையின் கீற்று