ETV Bharat / international

உலக சுகாதார அமைப்புக்கு ஆதரவாக களமிறங்கிய ஐநா தலைவர்! - உலக சுகாதார அமைப்புக்கு ஆதராவாக களமிறங்கிய ஐநா தலைவர்

உலக சுகாதார அமைப்புக்கு நிதி கொடுப்பது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என மிரட்டும் தொனியில் ட்ரம்ப் பேசியதைத் தொடர்ந்து, அமைப்புக்கு ஆதரவாக ஐநா தலைவர் அன்டோனியோ கட்டெரஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

WHO
WHO
author img

By

Published : Apr 14, 2020, 4:15 PM IST

கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும், தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இதனிடையே, கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு தவறாகக் கணித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

மேலும், அதற்கு நிதி ஒதுக்குவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறுகையில், "எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை உலக சுகாதார அமைப்பு முதலில் உணர வேண்டும். நோயின் தாக்கத்தை அது தவறாக கணித்துள்ளது.

எனவே, இனி அதற்கு நிதி ஒதுக்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். அனைவரையும் சமமாகப் பார்க்க வேண்டும். ஆனால், உலக சுகாதார அமைப்பு அப்படி பார்க்கவில்லை. சீனாவிற்கு ஆதரவாக அது செயல்பட்டுள்ளது" என்றார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய ஐநா தலைவர் அன்டோனியோ கட்டெரஸ், "கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, அதனை ஆதரிக்க வேண்டும் என்பது எனது கருத்து. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதனைக் கட்டுப்படுத்தும் வகையில், சரியான நடவடிக்கை தேவை. ஒரு தரவை பல்வேறு விதமானவர்கள் பலவாறு எடுத்துக் கொள்வது இயல்பான ஒன்று. கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தியப் பிறகு, தொற்றைக் கையாளும் முறைகள் மறுபரிசீலனை செய்யப்படும்.

தொற்று நோய்களை ஆராய தொடங்கினால் அது எப்படி உருவானது, உலகம் முழுவதும் எப்படி அழிவைப் பரப்பியது, அதனை எப்படி கையாண்டார்கள் போன்றவற்றைப் புரியக் காலம் தேவை. இதில் கற்றப் பாடங்கள், எதிர்காலத்தில் நிகழும் பேரிடர்களைச் சமாளிக்க முக்கியப் பங்காற்றும்.

ஆனால், இப்போது அதற்கான நேரமில்லை. சர்வதேச சமூகத்தின் நலன் கருதி அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். கரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தியத் தாக்கங்கள் இதுவரை நிகழ்ந்திடாத அளவுக்கு மிக அபாயமானவை. மனித இனத்திற்கு எதிரான நெருக்கடியைக் காட்டிலும் சமூக, பொருளாதார, மருத்துவத் தாக்கங்கள் இதனால் ஏற்பட்டுள்ளன.

உறுப்பு நாடுகளுக்கு உதவும் வகையில், உலக சுகாதார அமைப்பின் ஆயிரக்கணக்கான அலுவலர்கள் வழிமுறை வகுக்கின்றனர். பாதிக்கப்பட்டோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது" என்றார்.

இதையும் படிங்க: உலகத்தின் அவசரத் தேவை செவிலியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.