பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தாலிபான் விவகாரம் குறித்து, தனது அமைச்சரவையுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர், இவ்விகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் பேசியதாவது, 'ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் பிரிட்டன் நாட்டினரை மீட்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுவருகிறது. நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை மீட்கும் பணியில் பிரிட்டன் அரசு ஈடுபட்டுவருகிறது. ஆப்கானிஸ்தானில் நிலைமை சீரடையும் என நம்புகிறோம்.
மீட்புப் பணிகள் சவால் நிறைந்ததாக இருந்தாலும், அதை விரைந்து மேற்கொள்ளும் முயற்சியில் களமிறங்கியுள்ளோம்.
இதுவரை பிரிட்டன் அரசு ஆயிரத்து 615 பேரை மீட்டுள்ளது. மேலும், போர்ச்சூழல் காரணமாக பிரிட்டன் வரும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கும் அடிப்படை வசதிகளை அரசு வழங்கும்" என உறுதியளித்துள்ளார்.
அலுவல் ரீதியாகத் தேவை ஏற்படும்பட்சத்தில் தாலிபான்களுடனும் இணைந்து செயல்படத் தயார் எனவும்; நாங்கள் திறந்த மன நிலையில் உள்ளோம் எனவும் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உலகை உலுக்கிய வீடியோ... ஆப்கன் குழந்தை தந்தையிடம் ஒப்படைப்பு