இதுகுறித்து நேற்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் டாமினிக் ராப், "எதேச்சதிகாரர்களின் கையாள்கள், சர்வாதிகாரிகளின் கூலிப்படையினர் உள்ளிட்ட நபர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்க திட்டமிட்டுள்ளோம்" என்று கூறினார்.
விரைவில் தடைவிதிக்கப்படவுள்ள முக்கிய நபர்கள், அமைப்புகள் குறித்து அவர் கூறியதாவது:
- ரஷ்ய அலுவலர்களின் ஊழலை அம்பலப்படுத்திய சர்ஜி மெக்நிட் என்ற வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்குத் தொடர்புடைய 25 ரஷ்யர்கள்
- வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலைக்குக் காரணமான 20 சவுதி நாட்டினர்
- ரோஹிங்யா இன மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் மீது வன்முறையை ஏவிய, இனப் படுகொலையில் ஈடுபட்ட மியன்மார் ராணுவத் தளபதிகள் இரண்டு பேர்
- வடகொரியாவில் பலரைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்கிய இரண்டு நிறுவனங்கள்
மேலும் பேசிய அவர், பிரிட்டன் குறிவைத்துள்ள நபர்கள் சட்ட விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டவர்கள் என்றும், அரசியல் ஆதாயத்துக்காக கொலை, துன்புறுத்தல், அடிமைப்படுத்தல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என்றும் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக இருந்தபோது பிரிட்டன், தன்னிச்சையாக யார் மீதும் பொருளாதாரத் தடைவிதித்ததில்லை. அந்த வகையில், தனிநபர்கள், நிறுவனங்கள் மீது பிரிட்டன் தன்னிச்சையாகப் பொருளாதாரத் தடைவிதிப்பது இதுவே முதல் முறையாகும்.
இதையும் படிங்க : உலகிற்கே சீனா பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது - ட்ரம்ப்