பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சைக்கிள் ஓட்டுவதில் அதீத ஆர்வம் கொண்டவர். இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பகுதியில் உடல்நலம் மேம்பாட்டு சார்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் அவர் பங்கேற்றார். அங்கு சைக்கிள் பேரணியைத் தொடக்கிவைத்த அவர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹீரோ நிறுவன சைக்கிளை ஓட்டி அசத்தினார்.
கோவிட் - 19 காரணமாக மக்களின் சுகாதாரம் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ள நிலையில், உடல் பருமன் கொண்டவர்களுக்கு வைரஸ் பாதிப்பின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதைத் தடுக்கும் விதமாகவே இந்த விழிப்புணர்வு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ட்விட்டர் பதிவில், சைக்கிள் ஓட்டுவது, நடைபயிற்சி செய்வதன் மூலம் உலகம் சந்திக்கும் சுகாதார, சுற்றுச்சூழல் சிக்கல்களை எளிதில் எதிர்கொள்ளலாம். இதற்கான சிறப்பு நிதியை பிரிட்டன் அரசு ஒதுக்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சீனாவை மீண்டும் அச்சுறுத்துகிறதா கரோனா?