ETV Bharat / international

தென் கொரியா துரித கருவிகளை பிரிட்டன் சோதனை

லண்டன் : தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட துரித பரிசோதனை கருவிகளை பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவமனை ஒன்று சோதனையிட தொடங்கியுள்ளது.

UK ANTI VIRUS KITS
UK ANTI VIRUS KITS
author img

By

Published : Apr 17, 2020, 11:41 AM IST

கரோனா வைரஸ் பாதிப்பால் திண்டாடிவரும் உலக நாடுகளுக்கு சுகென்டெக் என்ற தென் கொரிய மருந்து நிறுவனம், மலிவு விலையில் துரித பரிசோதனை கருவிகளை தயாரித்து விநியோகித்து வருகிறது. 12.50 டாலருக்கு கிடைக்கும் இந்த துரித பரிசோதனை கருவிகளை பிரிட்டனின் ருதென்ஃபோர்டு ஹர்த் என்ற தனியார் மருத்துவக் குழுமம் பரிசோதிக்க ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சோதனையை அந்நாட்டில் உள்ள தனியார் புற்றுநோய் மருத்துவமனை ஊழியர்கள் நடத்தியதாகவும், சோதனை மாதிரிகள் விலையுயர்ந்த பரிசோதனைக் கருவிகளில் மேற்கொள்ளப்படும் என அம்மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியா பரிசோதனைக் கருவிகளின் நம்பகத்தன்மையை தெரிந்துகொள்ளவே இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. சீனாவில் தோன்றி உலகையே சூறையாடிவரும் கரோனா வைரஸ் காரணமாக இதுவரை பிரிட்டனில் 99 ஆயிரத்து 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 12 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைகிறது - எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.