கடந்த வாரம் அமெரிக்கா, ஈராக் தலைநகரம் பாக்தாத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரும் அந்நாட்டு ராணுவத்தின் எலைட் கட்ஸ் படைப் பிரிவின் தளபதியான குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
அதையடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவியதால், அமெரிக்கா தனது பாதுகாப்புப் படையை குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைத்திருந்தது.
இது ஈரானுக்கு அமெரிக்க விடுத்த போர் அறைகூவல் போல் இருந்தது. இதையடுத்து ஈரானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படையினர் மீது அந்நாட்டு விமான தளத்திலிருந்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை இன்று நிகழ்த்தியது. இந்தத் தாக்குதலைக் கண்டித்த ஃபிரான்ஸ் நாடு, தனது படையினரை சுமார் 160 பேரை ஈராக் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.
இருநாடுகள் இடையே நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை தணியும் வரை ஃபிரான்ஸ் நாட்டுப் படையை திரும்பப் பெறப்போவதில்லை என்றும் மேலும் அப்பகுதியில் ஐஎஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் செயல்படபோவதாகவும் ஃபிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்கா தன் படையினரை ஈராக் நாட்டில் இருந்து திரும்பப் பெற வலியுறுத்தி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்க: ஒரே பாணியில் அமெரிக்காவும் ஈரானும்!