ETV Bharat / international

மருத்துவப் பணியாளராக பணியாற்றும் ஸ்வீடன் இளவரசி

author img

By

Published : Apr 18, 2020, 9:29 AM IST

Updated : Apr 18, 2020, 9:57 AM IST

ஸ்டாக்ஹோம் : ஸ்வீடன் நாட்டு இளவரசி சோபியா அந்நாட்டு மருத்துவமனை ஒன்றில் மருத்துவப் பணியாளராகக் பணியாற்ற இருக்கிறார்.

sweden princess
sweden princess

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர் போராடி வருகின்றனர். இரவு பகல் பாராது உழைக்கும் அவர்களுக்கு அனைத்துத் தரப்பு மக்களும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஸ்வீடன் நாட்டு இளவரசி சோபியா மருத்துவர்களுக்கு உதவி செய்ய நேரடியாகவே களமிறங்கிவிட்டார். ஆம், அந்நாட்டுத் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தன் பொறுப்பில் செயல்பட்டு வரும் ’சோபியா ஹெல்மெட்’ என்ற மருத்துவமனையில் மருத்துவப் பணியாளராக பணியாற்ற அவர் முன்வந்துள்ளார்.

இதற்காக அவர் மூன்று நாள்கள் பயிற்சி மேற்கொண்டு பணியில் இணைய உள்ளார். அவரின் இந்த செயல் உலக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மருத்துவப் பணியாளர்களுடன் இலவரசி சோபியா
மருத்துவப் பணியாளர்களுடன் இலவரசி சோபியா

ஸ்வீடன் நாட்டில் இதுவரை 13 ஆயிரத்து 200 பேர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தென்கொரிய தேர்தல் வெற்றி; அதிபருக்கு தலாய்லாமா வாழ்த்து

Last Updated : Apr 18, 2020, 9:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.