ETV Bharat / international

சொந்தமாக விண்வெளி நிலையத்தை உருவாக்க ரஷ்யா முடிவு! - ரஷ்ய அகாடமி ஆப் சயின்சஸ் மாநாடு

மாஸ்கோ: ரஷ்யா தனக்கென்று தனியாக ஒரு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளது.

ரஷ்யா
ரஷ்யா
author img

By

Published : Nov 27, 2020, 5:28 PM IST

உலகின் பல்வேறு நாடுகளும் ஒன்றிணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை கட்டியுள்ளன. இங்கு விண்வெளி தொடர்பான ஏராளமான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்யா தனக்கென்று தனியாக ஒரு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைக் கட்டுவதற்கு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் ராக்கெட் மற்றும் விண்வெளி நிறுவனமான எனர்ஜியா கட்ட இருக்கும் விண்வெளி மையத்தில் 3 முதல் 7 பகுதிகளை கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 2 முதல் 4 பேர் வரை தங்கி ஆராய்ச்சி செய்யும் வகையில் உருவாக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, விண்வெளி தொடர்பான ரஷ்ய அகாடமி ஆப் சயின்சஸ் மாநாட்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தின் ரஷ்யப் பிரிவு விமான இயக்குநர் விளாடிமிர் சோலோவையோவ் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், "சர்வதேச விண்வெளி நிலையத்தில் சில பாகங்கள் சேதமடைந்துள்ளன. இதை மறுசீரமைக்க முடியாத அளவிற்கு சிக்கல் இருக்கிறது. இதனால், அதன் செயல்பாடு 2025ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. இதற்கான பராமரிப்பு செலவு 132 முதல் 198 மில்லியன் டாலர்கள் வரை ஆகிறது. இது தொடர்பாக அடுத்தாண்டு தொடக்கத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். மேலும், ரஷ்யா சார்பில் தனி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கிட முடிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தை ரஷ்யா அமைத்திடும் பட்சத்தில், விண்வெளி ஆராய்ச்சியில் புதிய புரட்சியை ஏற்படுத்தக்கூடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.