மத்திய தரைக்கடல் பகுதியில் மீன்பிடி படகுகளில் சிக்கித் தவித்த 146 அகதிகளை இத்தாலி கடற்படையினர் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி மீட்டனர். கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் அந்த படகிலேயே வைக்கப்பட்டனர். அவர்களில் நான்கு பேரின் உடல்நிலை மோசமானதால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், மீட்கப்பட்ட 146 அகதிகளின் உடல்நிலையைக் கண்காணிக்க ஏதுவாக அவர்களை பயன்படுத்தப்படாத கப்பலுக்கு இத்தாலி அரசு மாற்றியுள்ளது. அங்குள்ள செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் அவர்களது உடல்நிலையைக் கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகளை இத்தாலி கடற்படை மீட்ட மறுநாள் முதல், வெளிநாட்டுக் கப்பல்களுக்கு இத்தாலி துறைமுகங்களில் நுழையத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றிய விதிகளின்படி ஒரு நாட்டிற்குள் வரும் அகதிகளை அனைத்து ஐரோப்பிய நாடுகளும் பகிர்ந்துகொள்ளவேண்டும். இதனால் விரைவில் இந்த அகதிகள் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு ஐ.நா. தலைவர் சல்யூட்