கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளை ஆட்டம் காண செய்துள்ளது. இதனால் பல்வேறு தரப்பினர் பாதிப்புக்குள்ளானாலும், இம்மாதிரியான பேரிடர் காலத்தில் பெண் அகதிகள் அதிக அளவில் வன்முறையை சந்திப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், பல சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் பெண் அகதிகளை பாலியல் தொழில், குழந்தை திருமணம் ஆகியவற்றுக்கு வற்புறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "இம்மாதிரியான பேரிடர் காலத்தில் அகதிகள், புலம்பெயர் பெண்கள், சிறுமிகள் ஆகியோர் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் அதிக அளவில் பாதிப்பை சந்திக்கின்றனர். இம்மாதிரியான குற்ற செயலில் ஈடுபடுபவர்களை விட்டுவிடக் கூடாது.
வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவையான உதவி அளிக்கப்பட வேண்டும். அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பெண்களுக்கான உதவி மையங்கள் பெருமளவில் செயல்படவில்லை அல்லது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவுக்கு எதிராக மற்ற நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டிவரும் இந்தியா!