ETV Bharat / international

100 வயதாகும் கேப்டனுக்கு கவுரவம் வழங்கிய ராணி இரண்டாம் எலிசபெத்

author img

By

Published : Jul 18, 2020, 2:04 PM IST

கரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற கேப்டன் டாம் மோரேவின் செயலை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கவுரத்துள்ளார்.

queen-elizabeth-ii-confers-knighthood-on-100-year-old-fundraiser-captain

இரண்டாம் உலகப்போரில் பங்குபெற்ற கேப்டன் டாம் மோரே தனது 100ஆவது பிறந்த தினத்தை கொண்டாடினார். அப்போது கரோனா வைரஸுக்கு எதிராக முன்னணியில் போராடி வரும் சுகாதார ஊழியர்களுக்காக 33 மில்லியன் யூரோக்கள் திரட்டினார்.

இவரது செயல்களைப் பாராட்டும் வகையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கேப்டன் டாம் மோரேவுக்கு சிறப்பான மரியாதை வழங்க ராணி எலிசபெத்திடன் பரிந்துரைத்தார். இதுகுறித்து அவர் பதிவிட்ட ட்வீட்டில், ''டாம் மோரேவின் நிவாரண நிதி திரட்டும் செயல் பல சாதனைகளை படைத்துள்ளது. நாட்டின் பல்வேறு தரப்பினரையும் ஊக்கப்படுத்தியுள்ளது. கரோனா வைரஸை எதிர்கொள்ள இருட்டில் தவித்த அனைவருக்கும் ஒளியை போன்று வழிகாட்டியுள்ளார்'' என்றார்.

இந்நிலையில் கேப்டன் டாம் மோரேவுக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் க்நைட்வுட் மரியாதை வழங்கி கவுரவித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனா பரிசோதனையில் அமெரிக்கா முதல் இடம், இந்தியா 2ஆவது இடம் -வெள்ளை மாளிகை தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.