ETV Bharat / international

மக்களின் பணத்தில் புதுப்பிக்கப்பட்ட வீடு: செலவை திரும்ப செலுத்திய இளவரசர் ஹாரி! - இளவரசர் ஹாரி

லண்டன்: பொதுமக்களின் வரியில் புதுப்பிக்கப்பட்ட ஃபிராக்மோர் இருப்பிடத்திற்கு (Frogmore Cottage) செலவை இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி திரும்பச் செலுத்தியுள்ளனர்.

UK prince returns public money
UK prince returns public money
author img

By

Published : Sep 8, 2020, 12:15 PM IST

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் அரச குடும்பத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகப்போவதாக கடந்த மார்ச் அறிவித்தனர். இதற்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தும் ஒப்புதல் அளித்தார்.

அப்போதே பக்கிங்ஹாம் அரண்மனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரிட்டனிலுள்ள ஃபிராக்மோர் இருப்பிடத்தை (Frogmore Cottage) புதுப்பிக்க ஆன செலவை இளவரசர் ஹாரியும் மேகனும் திருப்பித் தர விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்துவரும் ஹாரி-மேகன் தம்பதி ஃபிராக்மோர் இருப்பிடத்தைப் புதுப்பிக்க ஆன செலவை திரும்பச் செலுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஹாரி-மேகன் தம்பதி செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "அரசு குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சவர்ன் கிராண்ட் (Sovereign Grant) தொகையிலிருந்து புதுப்பிக்கப்பட்டதற்கான தொகை வழங்கப்பட்டுள்ளது.

UK prince returns public money
ஃபிராக்மோர் இருப்பிடம்

லண்டனுக்கு மேற்கே, ராணி எலிசபெத் II இன் வின்ட்சர் கோட்டை வீட்டிற்கு அருகிலுள்ள ஃபிராக்மோர் குடியிருப்பைப் புதுப்பிக்க ஆன செலவுகள் முழுவதுமாக திரும்பச் செலுத்தப்பட்டுள்ளது. அது அவர்களின் இங்கிலாந்து வீடாக தொடர்ந்து இருக்கும்" என்றார்.

அனைத்து அரச குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆண்டுதோறும் சவர்ன் கிராண்ட் (Sovereign Grant) என்று ஒரு குறிபிட்டத் தொகை வழங்கப்படும். ஹாரி-மேகன் தம்பதி அரசு குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தாலும் இந்தத் தொகை அவர்களுக்கு தொடர்ந்து கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2019ஆம் ஆண்டு 2.4 மில்லியன் டாலர்கள் செலவில் ஃபிராக்மோர் இருப்பிடம் புதுப்பிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கரோனா தடுப்பு மருந்து விநியோகத்தை யுனிசெப் வழிநடத்தும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.