வாடிகன் சிட்டி: கரோனா வைரஸுக்கு எதிரானப் போரில் பல நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. மக்களுக்குக் கரோனா தடுப்பூசிகளை விநியோகிக்கவும், அனைவருக்கும் இலவச தடுப்பூசிகளை வழங்கவும் பல நாடுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வாடிகனில் அடுத்த வாரம் கரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும் எனவும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள மக்களுடன் தான் வரிசையில் நிற்பேன் எனவும் போப் பிரான்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இவர் இதனை இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு தொலைக்காட்சிக்கு அளிக்கப்பட்ட பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், 'தடுப்பூசி போட்டுக்கொள்வது அனைவரது கடமை. வாடிகனில் அனைத்து மக்களுக்கும் அடுத்த வாரம் முதல் கரோனா தடுப்பூசி வழங்குவதற்கான பணிகளை செய்து வருகிறோம்' என்றார்.
முன்னதாக, இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் எடின்பர்க் டியூக் இளவரசர் பிலிப் ஆகியோர் கரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொண்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்தது.
இதையும் படிங்க : கரோனா தடுப்பூசிக்காக காத்திருக்கும் எலிசபெத் ராணி - காரணம் என்ன தெரியுமா?