பல்லாயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் சனிக்கிழமையன்று (நவ.23) பாரிஸ் வழியாக அணிவகுத்துச் சென்றனர். அப்போது பெண்களுக்கு எதிரான கொடூரமான வீட்டு வன்முறைகளைத் தடுக்க தேசிய விழிப்புணர்வுக்கு அழைப்பு விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் ஃபிரான்ஸ் நாட்டிற்கு உலகளவில் நற்பெயர் உள்ளது. உலகெங்கிலும் உள்ள பெண்களின் உரிமைகள் ஃபிரான்சில் நிலைநிறுத்தப்படுகின்றன.
உள்நாட்டு வன்முறையாளர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். பெண்கள் தொடர்பான பிரச்னைக்கு காவலர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்த உள்ளனர்.
தங்களின் அழுத்தத்துக்கு அரசு பணிய வேண்டும் என்றும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். சிலர் இது பிரான்சின் அவமானம் என்றும் கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா!