ஒரு நாட்டின் உற்பத்தித் திறன், நீண்ட கால பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள காரணங்களை மதிப்பீடு செய்து, உலக பொருளாதார போட்டித்திறன் குறியீடு (Global Competitiveness Index) என்ற பட்டியலை ஆண்டுதோறும் உலக பொருளாதார அமைப்பு ( World Economic Forum) வெளியிடுகிறது.
அந்த வகையில், இந்தாண்டிற்கான பட்டியலையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், பாகிஸ்தான் கடந்தாண்டை விட மூன்று இடங்கள் கீழிறங்கி, 110ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நிலவிவரும் ஊழல், குறைவான உற்பத்தித் திறன், பத்திரிகை சுதந்திரமின்மை உள்ளிட்ட காரணங்களே இதற்குக் காரணம் என உலக பொருளாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, இந்தியாவுக்கு 68ஆவது இடமும், இலங்கைக்கு 84ஆவது இடமும், வங்கதேசத்துக்கு 105ஆவது இடமும், நேபாளுக்கு 108ஆவது இடமும் கிடைத்துள்ளது.
இதையும் வாசிங்க : விண்ணில் நடந்த முதல் மனிதர் மரணம்!