ETV Bharat / international

'ஆக்ஸ்போர்டு கண்டறிந்த கோவிட் -19 தடுப்பூசி வெற்றிபெற 50% மட்டுமே வாய்ப்பு'

லண்டன்: கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பூசி வெற்றிபெற 50 விழுக்காடு மட்டுமே வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்த கோவிட்
ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்த கோவிட்
author img

By

Published : May 26, 2020, 12:03 AM IST

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்காததால், நாளுக்கு நாள் இதனால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக, அண்மையில் அறிவித்தது.

ஜெனிஃபர் கல்வி நிலையத்தின் தடுப்பூசி பிரிவு பேராசிரியர் சாரா கில்பெர்ட் இதுகுறித்து கூறுகையில், ''ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தால் கரோனா தடுப்பூசி மூன்று மாதங்களாக ஆய்வு செய்யப்பட்டு வந்தது. இந்த தடுப்பூசி பரிசோதனையில் முழுமையாக வெற்றி பெறுவோம்'' எனத் தெரிவித்தார்.

மேலும் தடுப்பூசி பரிசோதனைக்காக இங்கிலாந்து முழுவதும் 10,260 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் சாரா கில்பெர்ட் அறிவித்தார். இந்நிலையில் இந்த கரோனா வைரஸ் தடுப்பூசி வெற்றி பெற, 50 விழுக்காடு மட்டுமே வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் தயாரிப்பு அதிகரிப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.