கொரோனா வைரஸ் தோற்று இருக்கும் பயத்தில் லிதுவேனியாவில் தனது சொந்த மனைவியை கணவரும், அவரின் இரு மகன்களும் இணைந்து குளியறையில் அடைத்து பூட்டி வைத்துள்ளனர். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அவர்களிமிருந்து அப்பெண்ணை காப்பாற்றினர்.
இதுகுறித்து விசாரிக்கையில், அப்பெண் விமானத்தில் வந்த போது வெளிநாட்டு நபருடன் உறையாடியுள்ளார். இதனால், தனக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கு வாய்ப்பு உள்ளது என விளையாட்டாக கூறியுள்ளார். இதை கேட்டுவுடன், பயந்த கணவரும், இரண்டு மகன்களும் தாயாரை குளியலறைக்கு உள்ளே தள்ளிவிட்டு கதவை தாழ்ப்பால் போட்டு பூட்டியது தெரியவந்தது.
இதை தொடர்ந்து, காவல் துறையினர் அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில், அப்பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த பால்டிக் நாடான லிதுவேனியாவில் 2.8 மில்லியன் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், இதுவரை ஒரேயொருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் எதிரொலி : புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பொதுமக்கள் சந்திப்பு ரத்து