போர்ச்சுகல் நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள மகாவ் நகரில் நேற்று பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, அருகில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு ஆயிரத்து 800 தீயணைப்புப் படையினர், 19 தீயணைப்பு விமானங்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் மும்முரம் காட்டினார்.
கட்டுக்கடங்காமல் எரிந்துகொண்டிருந்த காட்டுத் தீ, பல மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதில், சுவாசக் கோளாறு காரணமாக ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந்நகர மருத்துவ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.