ETV Bharat / international

பின்லாந்தில் சந்திக்கும் ரஷ்யா-அமெரிக்கா அமைச்சர்கள்!

மாஸ்கோ: வெனிசுவேலா விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யா முரண்பாடு கொண்டுள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவை, ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் இன்று சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author img

By

Published : May 6, 2019, 12:42 PM IST

ரஷ்யா, அமெரிக்கா அமைச்சர்கள்

வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவரான ஜுவான் குவாய்டோ, இந்த ஆண்டு ஜனவரியில் தன்னை அதிபராக அறிவித்துக்கொண்டார். இதனை ஆதரித்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தற்போது அதிபராக இருக்கும் நிக்கோலஸ் மதுரோவை பதவி விலகும்படி வலியுறுத்தி வருகின்றன. மதுரோவுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் களமிறங்கியுள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் அதிபர் மதுரோவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததுள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா இடையே மாறுபட்ட கருத்துகள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தன.

இத்தகைய சூழலில், ஆர்க்டிக் பிராந்தியம் நாடுகள் பங்கேற்றும் மாநாடு பின்லாந்தில் நடைபெற உள்ளது. இதில் ரஷ்யா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உறுப்பு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவை, ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் இன்று சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட ட்ரம்ப் பல்வேறு விவகாரங்கள் குறித்து தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.