ETV Bharat / international

கரோனா கடுமையாக பாதித்த நாட்டில் ஊரடங்கு தளர்வு! - மாஸ்க்குகள்

ரோம்: இத்தாலியில் வரும் மே 3ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருவதையடுத்து, அந்நாட்டில் பணிபுரியும் களப்பணியாளர்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்க அந்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

Italy
Italy
author img

By

Published : Apr 26, 2020, 11:32 AM IST

சீனாவில் கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டது. இந்தத் தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இத்தாலி இருக்கிறது. இத்தாலியில் இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 1,90,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் வயதானோரின் மக்கள் தொகை மற்ற நாடுகளை விட அதிகமாக இருப்பதே உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாகவே அந்நாட்டில் கோவிட்-19 தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவந்தது. இதனால் மே 3ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு நீட்டிக்கப்படமாட்டாது என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

அதற்கேற்ப மே 4ஆம் தேதி ஊரடங்கு தளர்த்தப்படுவதால், சுகாதாரப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள், போக்குவரத்து ஊழியர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கவுள்ளதாக பெருந்தொற்றுக்காக இத்தாலியில் அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் தலைவர் டொமினிகோ அர்குரி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பணிக்குத் திரும்புவார்கள் என்பதால் இந்த முகக்கவசங்கள் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றார்.

ஐரோப்பா கண்டத்திலேயே மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் இத்தாலியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் வைரஸ் பரவல் பலமடங்கு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கரோனாவுக்கு எதிராக போராடிய இந்திய மருத்துவரை கௌரவித்த அமெரிக்கா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.