டெல்லி: 2016இல் இந்தியாவைச் சேர்ந்த ஆஷா ராணி 'தி ஐயன் குயின்' (The iron queen) என்ற பட்டத்தை தன்னுடைய சாதனையால் பெற்றார். தன்னுடைய தலை முடி சடையால் மிகக் கனமான வாகனத்தை இழுக்கும் தனது சாதனையைத் தானே முறியடித்தார். ஆஷா ஒரு பெரிய டபுல் டக்கர் பேருந்தை இத்தாலியின் மிலனில் உள்ள ‘லோ சோ டேய் ரெக்கார்ட்’ (Lo show dei record) என்ற நிகழ்ச்சியில் செய்தார்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வைரல்
ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இந்தக் காணொலி மீண்டும் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதுவரை 3.6 லட்சத்திற்கு மேலாக பார்வையும் பல கமெண்ட்டுகளையும் பெற்றுள்ளது.
அந்தக் காணொலியில், ஆஷாவின் தலைமுடி இறுக்கமாகப் பேருந்தில் கட்டப்பட்டுள்ளது. அனைத்துப் பார்வையாளர்களும் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் எப்படி இது சாத்தியமாகும் என்று காண்பதற்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.
அதன்பின் ஆஷா தனது முடியை வைத்து அவ்வளவு பெரிய பேருந்தை இழுப்பதைக் கண்டதும் பார்வையாளர்கள் அனைவரும் கரகோஷமிட்டும், கூச்சலிட்டும் ஆஷாவை உற்சாகப்படுத்துகின்றனர். அதன்பின் ஆஷா கின்னஸ் ரெக்கார்டு செய்து முடிக்கிறார்.
12,000 கிலோவுக்கு மேல் உள்ள பேருந்து
தனது முடியால் ஆஷா இழுத்த பேருந்தின் கனம் ஏறத்தாழ 12 ஆயிரத்து 216 கிலோ ஆகும். ஒரு பெண்ணின் இத்தகைய சாதனையைக் கண்டு பிரமித்துப்போன நெட்டிசன்கள், அந்தக் காணொலியை மீண்டும் வைரலாக்கிப் பரப்பிவருகின்றனர்.
ஆஷா, ஏழு கின்னஸ் உலகச் சாதனைகளைத் தனது அசாத்திய பலுதூக்கும் திறனால் செய்துமுடித்துள்ளார். 2013இல் தன் காதுகளை வைத்து சுமார் 1700 கிலோ வாகனத்தை பிரிட்டனில் உள்ள லீசெச்டெர்சையர் பகுதியில் நிகழ்த்தினார்.
மேலும், பற்களை வைத்து வேகமாக 25 மீட்டர் தூரம் வாகனத்தை இழுக்கும் பெண்மணி என்ற சாதனையும் செய்திருக்கிறார் ஆஷா. இதை 22.16 வினாடிக்குள் ஆஷா செய்திருக்கிறார்.
இதையும் படிங்க:கடவுளை ஆஜர்படுத்த உத்தரவிட்ட கும்பகோணம் நீதிமன்றத்திற்கு கண்டனம்