சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் நடந்த உலக சுகாதார அமைப்பின் 73ஆவது வருடாந்திர பேரவைக் கூட்டத்தில் இந்த முடிவானது எடுக்கப்பட்டது.
இந்தியாவைத் தவிர்த்து போட்சுவானா, கொலம்பியா, கானா, குனியா-பிசவ், மடகாஸ்கர், ஓமன், ரஷ்யா, தென்கொரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து சுயாதீன விசாரணை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததையடுத்து, இந்தியா இந்தக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவில் இந்தியா மூன்று ஆண்டுகள் உறுப்பினராக நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அலுவலகத்தை அவசியமின்றி பூட்டவேண்டாம்: கரோனா வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு