ETV Bharat / international

இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் ரஃபேல் விமானம்! - IAf recieves first Rafale combat aircraft

பாரிஸ்: பிரான்சின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடமிருந்து முதல் ரஃபேல் போர் விமானத்தை இந்திய விமானப்படை பெற்றுள்ளது.

rafale
author img

By

Published : Sep 20, 2019, 11:08 PM IST

பிரான்சிடமிருந்து இந்திய விமான படைக்கு ரூ. 60,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016ஆம் ஆண்டு கையெழுத்திட்டார். இதையடுத்து, இந்த விமானத்தை தயாரிக்கும் பணிகளை பிரான்சின் டசால்ட் ஏவியேசன் நிறுனம் செய்தது.

இந்நிலையில், இந்த விமானம் குறித்த இறுதி ஆய்வு மேற்கொள்வதற்காக இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் வி.ஆர். சௌத்தரி உள்ளிட்ட அலுவலர்கள் சென்றிருந்தனர். அப்போது ஏர் மார்ஷல் வி.ஆர் சௌத்தரி புதிதாக தயாரிக்கப்பட்ட ரஃபேல் போர் விமானத்தில் சுமார் ஒரு மணி நேரம் பறந்து, விமானத்தின் இயக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ரஃபேல் போர் விமானத்தின் செயல்பாடுகள் சரியாக இருந்ததால், விமானம் இந்திய விமானப்படை வசம் ஒப்படைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஆர்கேஎஸ் பாதவ்ரியா ரஃபேல் ஒப்பந்தத்தை முடிப்பதற்கு முக்கிய காரணமாக விளங்கினார். இதையடுத்து அவரை கௌரவிக்கும் விதமாக புதிய ரஃபேல் விமானத்தின் இறக்கையில், RB-01 என எண் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரஃபேல் போர் விமானம் அதிகாரப்பூர்வமாக வரும் அக்டோபர் 8ஆம் தேதி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பிரான்ஸ் பயணத்தின்போது இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அதன்பின்பும் விமானத்தின் சோதனை தொடர்ந்து நடைபெறும். பின்னர் அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு பின்னரே ரஃபேல் விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும்.

முன்னதாக இந்த புதிய போர் விமானத்தை இயக்குவதற்கு இந்திய விமானப்படையைச் சேர்ந்த சிறிய விமானி குழுவினர் பயிற்சி எடுத்துள்ளனர். அதேபோன்று 24 விமானிகளுக்கு மூன்று பிரிவுகளாக பயிற்சி வழங்கப்படவுள்ளது.

மேலும் படிக்க: 33 போர் விமானங்கள் வாங்க இந்திய விமானப் படை திட்டம்!

Intro:Body:

Indian Air Force (IAF) Sources: IAF received its first ‘acceptance’ Rafale combat aircraft from Dassault Aviation in France, yesterday. Deputy Air Force Chief Air Marshal VR Chaudhary also flew in the aircraft for around one hour.

https://www.timesnownews.com/india/article/iaf-receives-its-first-acceptance-rafale-combat-aircraft-from-dassault-aviation-in-france/492371

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.