பிரிட்டன் இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகனான இளவரசர் ஹாரி தனது தோழியும், காதலியுமான கனட நடிகை மேகன் மெர்கலை 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
பிரிட்டன் அரசக் குடும்பத்துக்கும் ஹாரி-மேகன் தம்பதியருக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாகச் செய்தி எழுந்துவந்த நிலையில், அரசக் குடும்பத்தின் உயர் பொறுப்புகளில் இருந்து தாங்கள் விலகுவதாக அத்தம்பதியர் சமீபத்தில் அறிவித்தனர்.
இதையடுத்து, வரும் மார்ச் 31ஆம் தேதியோடு இவர்கள் தங்களது பொறுப்புகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகவுள்ளனர். இந்நிலையில், காமன்வெல்த் தினத்தையொட்டி லண்டனின் வெஸ்ட்மினிஸ்ட் அபே தேவலாயத்தில் நடைபெறவுள்ள சிறப்பு வழிபாட்டில் இவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக பக்கிம்ஹாம் மாளிகை அறிவித்துள்ளது. இளவரசர், இளவரசியாக ஹாரி-மெர்கல் தம்பதியர் பங்கேற்கும் கடைசி நிகழ்ச்சி இதுவாகும்.
இதையும் படிங்க : துருக்கி-கிரேக்க எல்லையில் சிரியா அகதிகள் மல்லுக்கட்டு !