பருவநிலை மாற்றம் குறித்த 2019ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு ஐரோப்பிய நாடான ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் டிசம்பர் 2ஆம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றம் குறித்தும் புவி வெப்பமயமாதல் குறித்தும் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துவருகின்றனர்.
இந்த மாநாட்டில் பேசிய ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பருவநிலை போராளி கிரேட்டா தன்பெர்க், "பருவநிலை ஆபத்தாக கருதப்படும் புவிவெப்பமயமாதலுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகள் எடுக்காமல் பல அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் மக்களைத் தவறாக வழிநடத்துகின்றனர்.
புவியின் வெப்பம் தற்போதுள்ளதைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்பட்சத்தில் அது பேரழிவுக்கு வழிவகுக்கும். கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கான உறுதிமொழிகள் மட்டும் போதாது, புவிவெப்பமயமாதலுக்கு காரணமாகவுள்ள பசுமைகுடில் (கிரீன்ஹவுஸ்) வாயுக்களின் வெளியேற்றத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.
இந்த விசயத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கை அரசின் மீதோ பெருநிறுவனங்களின் மீதோ இல்லை. இது மக்கள் மீதான நம்பிக்கை. உலகம் தற்போது சந்தித்துவரும் சிக்கலை மக்கள் புரிந்துகொண்டுவிட்டால் மக்கள் மாறிவிடுவார்கள்.
-
“Well I am telling you there is hope. I have seen it.
— Greta Thunberg (@GretaThunberg) December 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
But it does not come from governments or corporations.
It comes from the people.”
Here’s a small part from my speech today at the #cop25 in Madrid. pic.twitter.com/Dg8pz969yS
">“Well I am telling you there is hope. I have seen it.
— Greta Thunberg (@GretaThunberg) December 11, 2019
But it does not come from governments or corporations.
It comes from the people.”
Here’s a small part from my speech today at the #cop25 in Madrid. pic.twitter.com/Dg8pz969yS“Well I am telling you there is hope. I have seen it.
— Greta Thunberg (@GretaThunberg) December 11, 2019
But it does not come from governments or corporations.
It comes from the people.”
Here’s a small part from my speech today at the #cop25 in Madrid. pic.twitter.com/Dg8pz969yS
இங்கிருக்கும் ஜனநாயகத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஜனநாயகம் என்பது தேர்தல் நாளில் மட்டும் நிகழ்வதில்லை; ஜனநாயகம் என்பது ஒவ்வொரு நொடியும் நிகழும். மக்களின் கருத்துகளே இந்த உலகை வழி நடத்துகிறது.
வரலாற்றில் பெரும் மாற்றங்கள் அனைத்தும் மக்களிடமிருந்துதான் தொடங்கியுள்ளது. நாம் யாருக்காகவும் காத்திருக்க தேவையில்லை. மாற்றம் மக்களாகிய நம்மிடமிருந்து தொடங்கட்டும்" என்று புவி வெப்பமயமாதல் குறித்த தனது கருத்துகளை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: சுற்றுச்சூழல் விருதை பெற மறுத்த கிரேட்டா தன்பெர்க்!