புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று கடந்தாண்டு சீனாவின் வூகான் பகுதியில் முதலில் அறியப்பட்டது. தற்போது உலகில் 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த பெருந்தொற்று நோய்க்கிருமி பாதிப்பு பரவியுள்ளது.
இந்தியாவை பொறுத்தமட்டில் பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கிவருகிறது. உலகம் முழுக்க 31 லட்சத்து 38 ஆயிரத்து 413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 985 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் ஒன்பது லட்சத்து 55 ஆயிரத்து 824 பேர் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் சீனாவில் புதியதாக கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பாளர்கள் 22 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். எனினும் உயிரிழப்புகள் இல்லை.
இதற்கிடையில் சீனாவில் தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. சீனாவில் 82 ஆயிரத்து 647 பேர் கரோனா பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
உயிரிழப்பு நான்காயிரத்து 633 ஆக உள்ளது. சீனாவில் இரண்டாம் கட்டமாக வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், தனிமைப்படுத்துதல் மற்றும் தகுந்த இடைவெளி கடைப்பிடிப்பு ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு (உலகின் முதல் பத்து நாடுகள்)
நாடுகள் | பாதிப்பு | உயிரிழப்பு |
அமெரிக்கா | 10,35,765 | 59,266 |
ஸ்பெயின் | 2,32,128 | 23,822 |
இத்தாலி | 2,01,505 | 27,359 |
ஃபிரான்ஸ் | 1,65,911 | 23,660 |
இங்கிலாந்து | 1,61,145 | 21,678 |
ஜெர்மனி | 1,59,912 | 6,314 |
துருக்கி | 1,14,653 | 2,992 |
ரஷ்யா | 93,558 | 867 |
ஈரான் | 92,584 | 5,877 |
சீனா | 82,858 | 4,633 |
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு: கேரள அரசின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை!