ETV Bharat / international

பிரான்ஸ் கோடீசுவரர் ஆலிவர் டசால்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு - பிரான்ஸ் கோடீசுவரர் ஆலிவர் டசால்ட்

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் கோடீஸ்வரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆலிவர் டசால்ட் நேற்று(மார்ச்.7) ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

MP Olivier Dassault
MP Olivier Dassault
author img

By

Published : Mar 8, 2021, 6:15 PM IST

இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, பிரான்ஸ் நாட்டின் கோடீஸ்வரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆலிவர் டசால்ட்(69) சென்ற ஹெலிகாப்டர், நார்மண்டியில் உள்ள காலவ்டோஸில் சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டசால்ட் உயிரிழந்தார்.

விபத்துக்கு முன் டசால்ட் பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், உள்துறை அமைச்சர் ஜெரார்ட் டர்மனுடன் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தனது ட்விட்டர் பக்கத்தில் "டசால்ட் ஒருபோதும் நம் நாட்டிற்கு சேவை செய்வதை நிறுத்தவில்லை. அவர் சொத்துக்களை மட்டும் மதிப்பிடுவதில்லை. அவரின் பிரிவு வருத்தமளிக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஆலிவர் டசால்ட் பிரான்ஸ் நாட்டில் புகழ்பெற்ற தினசரி செய்தித்தாள் நிறுவனத்தையும், விமான நிறுவனத்தையும் நடத்திவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சொந்த ஹெலிகாப்டரை தாக்கிய ஐ.ஏ.எஃப். - எழுவர் உயிரிழப்புக்கு காரணமானோர் மீது நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.