பின்லாந்தில் மொத்தமுள்ள 200 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்றது. இதில் சமூக ஜனநாயக கட்சி 17.7 விழுக்காடு வாக்குகள் பெற்று 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் ஆளுங்கட்சியான ஃபின்ஸ் கட்சி 17.5 விழுக்காடு வாக்குகள் பெற்று 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் ஆட்சி அமைக்க 101 இடங்கள் தேவைப்படும் நிலையில், கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் சமூக ஜனநாயக கட்சி ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே, தலைநகர் ஹெல்சின்கியில் சமூக ஜனநாயக கட்சி சார்பில் நடத்தப்பட்ட வெற்றி கொண்டாட்டத்தில் அக்கட்சி தலைவர் ஆன்டி ரின்னி கலந்து கொண்டார். அப்போது பேசியவர், "நாம் தான் பின்லாந்தின் மிகப்பெரிய கட்சி" என்று பெருமிதம் தெரிவித்தார்.
தேர்தல் பரப்புரையின் போது, பிரதமர் ஜூஹா சிபிலாவின் கொள்கைகள் நியாயமற்றவை என்ற கூற்றை அழுத்தமாக மக்களிடம் கொண்டு தேர்த்தாலேயே ஆன்டி ரின்னி தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசியல் நோக்கர்கள கருத்து தெரிவித்து வருகின்றனர்.