ETV Bharat / international

புடின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் - புடின் மற்றும் லாவ்ரோவின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

ரஷ்யா - உக்ரைன் போரை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புடின் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவின் சொத்துக்களை முடக்க ஐரோப்பா ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.

புடின் மற்றும் லாவ்ரோவின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்..

author img

By

Published : Feb 26, 2022, 8:12 AM IST

புருசல்ஸ்: ஐரோப்பிய நாடுகளின் குழுவான ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவின் சொத்துக்களை முடக்க ஒப்புதல் அளித்துள்ளது. லாவ்ரோவின் இதர உடைமைகளையும் கணக்கீட்டில் கொண்டு வந்துள்ளது.

இந்த முடிவு ரஷ்யாவின் தனது அண்டை நாட்டின் மிருகத்தனமான தாக்குதலை நிறுத்தவும், ஐரோப்பிய ஒன்றியம் மீது போர் புரிவதைத் தடுக்கவும் எடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மேலும், இதுகுறித்து லாட்வியா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் எட்கர் ரின்கேவிசிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அனைவரும் இந்த 2ஆவது பொருளாதாரத் தடையை ஏற்றுக் கொண்டுள்ளது, இதில் ரஷ்யாவின் அதிபரும், வெளியுறவுத் துறை அமைச்சரும் சேர்க்கப்பட்டுள்ளனர்” எனத் குறிப்பிட்டிருந்தார்.

ஐரோப்பிய கவுன்சிலில் ரஷ்யா இடைநிறுத்தம்

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 47 நாடுகளின் பட்டியலிலிருந்து ரஷ்யா இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இது உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை கண்டித்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும், ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'எப்படியாவது விரைவாக உதவி பண்ணுங்க' - உக்ரைனில் தவிக்கும் உசிலம்பட்டி மாணவர்கள் உருக்கமான வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.