ETV Bharat / international

ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய கரோனா மீட்பு தொகை எவ்வளவு தெரியுமா?

கரோனா வைரஸ் நோய் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீளும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியம் 750 பில்லியன் யூரோக்களை மீட்பு தொகையாக அதன் உறுப்பு நாடுகளுக்கு வழங்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியம்
author img

By

Published : May 28, 2020, 1:21 PM IST

கரோனா வைரஸ் நோயால் ஐரோப்பிய நாடுகள் கடும் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துவருகின்றன. நாடுகளைப் பொருளாதார தேக்க நிலையிலிருந்து மீட்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 750 பில்லியன் யூரோக்களை மீட்பு தொகையாக ஒதுக்கியுள்ளது. இதில், பெரும்பான்மையான தொகை 27 உறுப்பு நாடுகளின் பொது பட்ஜெட்டிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ஐரோப்பிய நாடுகள் மிகக் கடுமையான பொருளாதார தேக்க நிலையை அடைந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிதிப் பற்றாக்குறை வரம்பை மீறி ஐரோப்பிய நாடுகள் வேலைவாய்ப்பு, வணிகம், சுகாதார அமைப்பு போன்றவற்றுக்கு பெரும்பான்மையான தொகைகளை ஒதுக்கியுள்ளன. பல நாடுகளும் ஊரடங்கை திரும்பப் பெற்றுவருவதால், மக்கள் தங்கள் வேலைகளுக்கு திரும்பியுள்ளனர்.

நிலைமையை சமாளிக்க இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு நிதி தேவைப்படுகிறது. இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வோன் லியேன் கூறுகையில், "70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய சவாலை நாம் சந்தித்துள்ளோம். இது ஐரோப்பிய நாடுகளுக்கான காலம்.

சவால்களை எதிர்க்கும் குணம் எங்களை நிலைத்து நிற்க வைக்கும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மீட்புத் தொகை எதிர்கால ஐரோப்பிய ஒன்றியத்திற்கானது. இதனை அனைத்து நாடுகளும் வரவேற்க வேண்டும் என்பது பேராசைமிக்கது. இருப்பினும், தங்களின் கருத்து வேறுபாட்டை ஒதுக்கிவிட்டு எதிர்காலத்தை நோக்கி அனைத்து நாடுகளும் பயணிக்க வேண்டும்.

நாம் அனைவரும் தனியாகப் பயணிக்க வேண்டும் அல்லது சேர்ந்து ஒன்றிணைந்து போராட வேண்டும். என்னுடைய விருப்பம் என்பது எளிதானது. அனைவரும் ஒன்றிணைந்து துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: உயிருக்குப் போராடும் சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.