ஐரோப்பிய ஒன்றியம் உயரிய மனித உரிமை விருதை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, 2020ஆம் ஆண்டு ஷக்ரோவ் அமைதிக்கான விருது, பெலாரஸ் எதிர்க்கட்சி மற்றும் அதன் தலைவர் ஸ்வியட்லானா சிகானவுஸ்காயாவுக்கு வழங்கப்படுகிறது.
பெலாரஸ் நாட்டில் அதிபர் அலெக்சாண்டர் லுகஸ்ஹென்கோவுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சி இந்த ஆண்டு பிரம்மாண்டமாக எழுச்சி பெற்று, போராட்டங்களை நடத்தி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் ஆறாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டார் அலெக்சாண்டர்.
இந்தத் தேர்தலில் முறைகேடு செய்து அலெக்சாண்டர் வெற்றிபெற்றதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அவர் 80 சதவிகிதம் வாக்குகள் பெற்றதும், முன்னணி எதிர்க்கட்சிக்கு 10 சதவிகிதம் வாக்குகள் கிடைத்ததும் மிகுந்த சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில், இதற்கு எதிராக நடைபெற்ற மக்கள் எழுச்சியை ஏற்படுத்திய எதிர்க்கட்சிக்கும், அதன் தலைவர் ஸ்வியட்லானா சிகானவுஸ்காயாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விழா டிசம்பர் மாதம் 16ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: கஜகஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல்: வெற்றி யாருக்கு?