ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரை பகுதியிலிருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஐசல் ஆஃப் முல் (Isle of Mull). இந்தத் தீவிற்கு மருந்துகள் கொண்டு செல்வதற்கு அதிக நேரம் பிடிப்பதுடன் அதிகமான செலவுகளும் ஏற்படுகின்றன. இதனை குறைக்கும் நோக்கில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் என்ற ட்ரோன்கள் தயாரிக்கும் நிறுவனத்துடன் இணைந்து பிரெஞ்சு ஏரோஸ்பேஸ் கம்பெனி பைலட் பிராஜட் திட்டத்தை இரண்டு ஆண்டுகளாக செய்து வந்தது.
இதனிடையே கரோனா வைரஸால் மருத்துவ உபகரணங்கள் கொண்டு செல்வதற்கு அதிக நேரங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் ட்ரோன்கள் மூலம் மருத்துவ உபகரணங்கள் கொண்டு செல்லும் திட்டம் இங்கிலாந்து அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று சில கிலோ எடையைத் தாங்கும் ட்ரோன் ஐசல் ஆஃப் முல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் டங்கன் வால்கர் பேசுகையில், ''ட்ரோன்கள் மூலம் கரோனா வைரஸ் பரிசோதனைக் கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல இருக்கிறோம். 20 கி.மீ தூரத்தை ட்ரோன் மூலம் 15 நிமிடங்களில் கடக்க முடிகிறது. இதற்கு விங்காப்டர் என பெயரிட்டுள்ளோம். 5 கிலோ எடைகளில் உள்ள பொருள்களைக் கொண்டு செல்ல முடியும்'' என்றார்.
இதையும் படிங்க: 'மூச்சு விட முடியல' என்று கதறிய பின்னரும் விடாத போலீஸ் - உயிரிழந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்