உலகில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை கரோனாவால் 29 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரை 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக பெரும்பாலான உலக நாடுகள் லாக்டவுனை அறிவித்துள்ளன. அத்துடன் உலக நாடுகள் விமான போக்குவரத்தை முற்றிலுமாக முடக்கிவைத்துள்ளன. இந்த நிலை எவ்வளவு நாட்கள் தொடரும் என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்கும் முயற்சியை சில உலக நாடுகள் பரிசீலித்துவருகின்றன.
வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தேவை உள்ளவர்களுக்கு இம்யூனிட்டி சான்றிதல் எனப்படும் நோய் எதிர்ப்பு சான்றிதல் ஒன்றை பரிசோதனை மூலம் வழங்கி பயணம் செய்ய அனுமதிக்கலாம் என்ற திட்டத்தை பல நாடுகள் முன்வைக்கின்றன. உலக நாடுகள் அவசரப்பட்டு இதுபோன்ற முடிவுகளை எடுக்க வேண்டாம் எனவும், இத்தனை காலம் மேற்கொண்ட உழைப்பு தேவையற்ற முடிவுகளால் வீணாகிவிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா கடுமையாக பாதித்த நாட்டில் ஊரடங்கு தளர்வு!