லண்டன்: உலகம் முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பிவருகிறது. இதனிடையே ஒமைக்ரான் தொற்று உலக மக்களிடையே பீதியை கிளப்பிவருகிறது.
இந்த நிலையில், பல்வேறு நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று பாதிப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்த வகையில், பிரிட்டனில் நேற்று ஒரே நாளில் மட்டும் 78,610 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒருவார காலமாக 30ஆயிரத்திற்கும் குறைவாக உறுதி செய்யப்படடுவந்த நிலையில், இருமடங்கு அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல, அமெரிக்காவிலும் தினசரி பாதிப்பு மீண்டும் 1 லட்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வரும் நாள்களில் இந்த பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சுகாதாரத்துறைகள் தெரிவிக்கின்றன. மேலும் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, இத்தாலி, தென்னாபிரிக்கா, போலந்து ஆகிய நாடுகளிலும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விரைவில் ஒமைக்ரான் பேரலை... 2 டோஸ் தடுப்பூசிப் பூசி பயனளிக்காது..