உலகை ஆட்டிப் படைத்து கொண்டிருக்கும் கோவிட்-19 தொற்றால் அனைத்து நாடுகளும் போதிய சுகாதார வசதிகள் இல்லாமல் போராடிக் கொண்டிருக்கின்றன. ஒரு புதிய ஆய்வில், கரோனா தொற்று ஒரு மருத்துவமனை வார்டின் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு 10 மணி நேரத்தில் பரவக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவிட் சார்ஸ்-2 என்ற தொற்று ஒரு மருத்துவமனையின் பரப்புகளில் எவ்வாறு பரவக்கூடும் என்பதை மருத்துவமனை தொற்று இதழில் ஒரு கடிதமாக வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வு, இங்கிலாந்தில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் மருத்துவமனை (யு.சி.எல்), கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனை (கோஷ்) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், ஒரு மருத்துவமனை படுக்கை அறையில் எஞ்சியிருக்கும் வைரஸ் டி.என்.ஏ 10 மணி நேரத்திற்குள் ஒரு வார்டில் மாதிரி செய்யப்பட்ட அனைத்து தளங்களிலும் கிட்டத்தட்ட பாதி இடங்களில் குறைந்தது ஐந்து நாள்கள் காணப்பட்டதாகக் குறிப்பிட்டனர்.
சார்ஸ்- கோவிட்-2 தொற்றைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, ஆராய்ச்சியாளர்கள், மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் டி.என்.ஏவின் ஒரு பகுதியை ஒரு தாவர-தொற்று வைரஸிலிருந்து செயற்கையாக நகலெடுத்தனர்.
பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சுவாச மாதிரிகளில் காணப்படும் சார்ஸ்-கோவிட்-2 நகல்களுக்கு ஒத்த செறிவில் அவர்கள் ஒரு மில்லிலிட்டர் தண்ணீரில் தொற்றைச் சேர்த்தனர்.
ஆராய்ச்சியாளர்கள் இந்த டி.என்.ஏ கொண்ட தண்ணீரை மருத்துவமனையின் ஒரு தனி அறையில் படுக்கையில் வைத்தனர். பின்னர் அடுத்த ஐந்து நாள்களில் மருத்துவமனை வார்டில் 44 தளங்களை மாதிரி செய்தனர். 10 மணி நேரத்திற்குப் பிறகு, மரபணு பொருள் மருத்துவமனை வார்டின் தளங்களில் 41 விழுக்காடு பரவியிருப்பதைக் கண்டறிந்தனர்.
அதாவது படுக்கைகள் முதல் கதவு கைப்பிடிகள், கை காத்திருப்பு அறை, குழந்தைகள் பொம்மைகள், புத்தகங்கள் வரை பரவியிருந்தது.
மூன்று நாள்களுக்குப் பிறகு 59 விழுக்காடாக அதிகரித்து, ஐந்தாவது நாளில் 41 விழுக்காடாக குறைந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து யு.சி.எல் நிறுவனத்தைச் சேர்ந்த லீனா சிரிக் கூறுகையில், "ஒரு வைரஸ் பரவுவதில் மேற்பரப்புகள் வகிக்கும் முக்கிய பங்கை எங்கள் ஆய்வு காட்டுகிறது. கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவுதல், கிருமி நாசினியை கொண்டு சுத்தம் செய்வது மிகவும் முக்கியமானது" என்றார்.
சிரிக் கூறுகையில், " ஒரு தளத்திற்கு ஒரு முறை தடுப்பூசி போடப்பட்டது, இது ஊழியர்கள், நோயாளிகள், பார்வையாளர்கள் மேற்பரப்புகளைத் தொடுவதன் மூலம் பரவியது எனக் கூறினார்.
ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "படுக்கை, அதிக படுக்கைகள் உடைய அறை, சிகிச்சை அறைகள் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் காணப்பட்டன.
மூன்றாம் நாளில், மருத்துவப் பகுதிகளில் 86 விழுக்காடு மாதிரி தளங்கள் நேர்மறையை சோதித்தன, நான்காம் நாளில், படுக்கையில் 60 விழுக்காடு மாதிரி தளங்கள் நேர்மறையை சோதித்தன" என்று தெரிவித்தனர்.
யு.சி.எல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வு இணை ஆசிரியர் கிளவுட்மேன்-கிரீன் எலைன் கூறுகையில், "இருமல், தும்மலின்போது உருவாகும் சுவாசத் துளிகளால் மக்கள் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்படலாம். சமமாக, இந்த நீர்த்துளிகள் ஒரு மேற்பரப்பில் இறங்கினால், ஒரு நபர் மேற்பரப்புடன் தொடர்பு கொண்டு பின்னர் அவர்களின் கண்கள், மூக்கு, வாயைத் தொட்ட பிறகு தொற்றுநோயாக மாறக்கூடும்.
இந்த ஆய்வு ஒரு குறிப்பிடத்தக்க நினைவூட்டலாகும். மேலும் கைகளை அடிக்கடி கழுவுதல், பாதுகாப்பு உபகரணங்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் இதன் பரவலைத் தடுக்க முடியும்" என்று கூறினார்.
மேலும் கோவிட்-19 இருமல் துளிகள் போன்ற உடல் திரவத்திற்குள் பரவக்கூடும். அதேசமயம் ஆய்வில் வைரஸ் டி.என்.ஏவை நீரில் பயன்படுத்தியது. சளி போன்ற ஒட்டும் திரவத்தில் மிகவும் எளிதாக பரவக்கூடும் .
இந்த ஆய்வின் ஒரு எச்சரிக்கை என்னவென்றால், ஒரு மேற்பரப்பில் ஒரு வைரஸ் எவ்வளவு விரைவாகப் பரவுகிறது என்பதை இது காட்டுகிறது என்றாலும், ஒரு நபர் எவ்வாறு பாதிக்கப்படுவார் என்பதை இது தீர்மானிக்க முடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி: தீவிரம் காட்டும் இஸ்ரேல்!