அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம், உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவின் 17 விநாடி காணொலியை ட்வீட் செய்துள்ளது. அக்காணொலியில் அந்தப் பிரமாண்ட கட்டடத்தில் இந்தியாவின் தேசியக்கொடியான மூவர்ணக்கொடி ஒளிரச் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் காட்சி காண்போரை கண்கவரச் செய்தது. புர்ஜ் கலீஃபா கட்டடத்தின் மொத்த உயரம் 829.8 மீ என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட்-19 உடனான போராட்டத்தில் இந்தியாவுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தும்விதமாக ஐக்கிய அரபு அமீரகம் உலகின் மிக உயர்ந்த கட்டடமான அபுதாபியில் உள்ள புர்ஜ் கலிஃபாவை மூவர்ணத்தில் ஒளிரவைத்துள்ளது.
கொடிய கரோனாவின் இரண்டாவது அலையில் சிக்கி இந்தியா கடுமையாகப் போராடிவருகிறது. நாட்டில் நேற்று ( ஏப்ரல் 25) மூன்று லட்சத்து 49 ஆயிரத்து 691 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.