ETV Bharat / international

பிரெக்ஸிட்டை இனி யாராலும் தடுக்க முடியாது - பிரிட்டன் பிரதமர் சூளுரை

லண்டன்: பிரெக்ஸிட்டை இனி யாராலும் தடுக்க முடியாது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சூளுரைத்துள்ளார்.

Britain PM boris johnson waving hands, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
Britain PM boris johnson waving hands
author img

By

Published : Dec 15, 2019, 4:36 PM IST

பிரெக்ஸிட் பரபரப்பிலிருக்கும் பிரிட்டனில் கடந்த 12ஆம் தேதி ( வியாழக்கிழமை) பொதுத்தேர்தல் நடந்தது. பிரெக்ஸிட்ட மையமாக வைத்து தேர்தலை எதிர்கொண்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.

இதையடுத்து, பாரம்பரிய தொழிலாளர் கட்சி ( எதிர்க்கட்சி) வாக்காளர்களின் கோட்டையான மேற்கு இங்கிலாந்து பகுதிக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "நாடு முன்னேறிச் செல்வதற்கான நேரம் வந்து விட்டது. நாம் அனைவரும் ஒன்றுகூடி பிரெக்ஸிட் விவகாரத்துக்கு தீர்வு காண வேண்டிய நேரமிது. அதை நான் கண்டிப்பாக செய்து முடிப்பேன். இனி பிரெக்ஸிட்டை தடுக்க யாராலும் முடியாது" என்றார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேட்டி

இதையும் படிங்க : பிரெக்ஸிட் என்றால் என்ன ?

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தேவைக்கும் அதிகமான கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள் உள்ளாதால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் மேற்கொண்ட பிரெக்ஸிட் வெளியேற்ற ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சுலபமான ஒன்றாகிவிடும். இதன் காரணமாக, 31ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாகவே பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிவிடும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Intro:Body:

Blank

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.