பிரிட்டனைச் சேர்ந்த ஆஷ்லே வாட்சன் என்பவர் புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். 18ஆவது கின்னஸ் தின உலக சாதனை நிகழ்வில் வாட்சன், இரண்டு பிரிட்டிஷ் ஜிம்னாஸ்டிக் வீரரான ஆஷ்லே வாட்சன் என்பவர், இரண்டு கம்பிகளுக்கு இடையே அதிகமான தொலைவில் பின்னோக்கி கரணம் அடிக்கும் முயற்சியில் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இதன்மூலம் உலகெங்கிலும் உள்ள புதிய உலக சாதனையாளர்களின் தொகுப்பில் வாட்சனின் பெயரும் சமீபத்திய கின்னஸ் புத்தகப்பதிப்பில் இடம்பெறும்.
புதிய நம்பிக்கையாளர்களின் சாதனை முயற்சிகள் அனைத்தும் 18ஆவது கின்னஸ் தின உலக சாதனை நிகழ்விற்கு முன்னதாக நடந்தன.
கின்னஸ் உலக சாதனை தினத்திற்காக செய்யப்பட்ட மற்ற கின்னஸ் உலக சாதனைகள் தலைப்புகளில் சில:
இங்கிலாந்து: போகோ ஸ்டிக்கைக் கொண்டு, 5 கார்களை தாண்டிக்குதித்து சாதனை செய்தவர் - டைலர் பிலிப்ஸ்,
சீனா: கைகளால் தலைகீழாக நடந்து 50 மீட்டர் தூரம் காரை 1 நிமிடம் 13.27 விநாடிகளுக்கு இழுத்து சாதனை செய்தவர் - ஜாங் ஷுவாங்,
ஜப்பான்: கொடுக்கப்பட்ட 30 விநாடிகளில் 45 முறை சம்மர் சாட் அடித்து சாதனை புரிந்தவர் - தகாஹிரோ இகேடா,
கத்தார்: 30 விநாடிகளில் ஒற்றைக் கால் பின்னோக்கிச் செல்லும் முயற்சியில், 12 முறை பின்னோக்கிச் சென்று சாதனைப் புரிந்தவர் - அயோப் துவாபே.
மேலும் இதேபோன்று, பல விதமான விளையாட்டுகளில் பலர் உலக சாதனைப் படைத்துள்ளனர்.
இதையும் படிங்க: Chennai Rain Alert: வெள்ள அச்சத்தால் கார்களை மேம்பாலத்தில் நிறுத்திய மக்கள்